வெற்றி படம் ‘அருவி’க்கு வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு

share on:
Classic

அருவி திரைப்படத்தில் கேலி செய்வது போன்ற காட்சிகளுக்கு படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வருத்தம் தெரிவித்துள்ளார்.

டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘அருவி’. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும்  முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

சமூக பிரச்சனையை பற்றி பேசியிருக்கும் அருவி படத்திற்கு திரைபிரபலங்கள்  பலர் தங்களது  பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சியை  கேலி செய்வது போன்ற காட்சிகள் இருப்பதால் சில எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. 

இதற்கு  படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,

அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்! 

இவ்வாறு அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்

News Point One: 
வெற்றி படம் ‘அருவி’க்கு வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு
News Point Two: 
அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம்
News Point Three: 
சமூக பிரச்சனையை பற்றி பேசியிருக்கும் அருவி படத்திற்கு பலர் பாராட்டு
News Counter: 
125
Loading...

Giri