வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு குவியும் ஆதரவு

share on:
Classic

இலங்கையில் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் இளைஞர்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் முருகன் கோயில் பகுதியில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பி அமைதியான முறையில், அறவழியில் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

இதேபோன்று, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் மெல்பர்ன் நகரில், விக்டோரியா சபைக் கட்டிடத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி வலியுறுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியடி, அவர்கள் முழக்களை எழுப்பினர்.

Loading...

surya