வெள்ளித்திரையில் நாளை வலம் வரும் திரைப்படங்கள் ஒரு பார்வை

share on:
Classic

வெள்ளிக்கிழமை என்றாலே திரைப்படம் வெளியீடு களை கட்டிவிடும். நாட்டின் 70 வது சுதந்திரம் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் குடிமகனின் உரிமைகளை எடுத்துச் சொல்லும் ஜோக்கர் படம் நாளை வெளியாகிறது. குக்கூ பட இயக்குனர் ராஜுமுருகனின் இந்த திரைப்படத்தில் 40 வயது குருசோமசுந்தரத்தை நாயகனாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குடிமகனுக்கு ஓட்டளிக்க உரிமையுள்ளது போல ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளை திரும்பப் பெறும் உரிமையும் தேவை என்பதை நிதர்சனத்தோடு எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன்.இதே போன்று சினிமா ரசிர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மற்றொரு திரைப்படம் விக்ரம் பிரபு நடிக்கும் வாகா திரைப்படம். முற்றிலும் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ஒரு இந்திய ராணுவ அதிகாரிக்கும் பாகிஸ்தான் பெண்ணிற்கும் எல்லையில் ஏற்பட்ட காதலை எடுத்துச் சொல்லும் கதைக்களத்தைக் கொண்டுள்ளது.

Loading...

vaitheeswaran