வைகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு  | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்பு வைகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு 

வைகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு 

November 23, 2017 198Views
 வைகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு 

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள குள்ளபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகதீஸ். இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகதீஸ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

தனது நண்பர்களுடன் வைகை அணையின் பிக்டேம் பகுதியில் குளிப்பதற்காக வந்தபோது,  திடீரென கால் தவறி தண்ணீருக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரதீஸ் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத்துறையினர், சுமார் 3 மணிநேர தேடுதலுக்கு பின்னர் பிரகதீசின் உடலை மீட்ட அவர்கள், பிரேதப்பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.