close
முகப்புவைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ

வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ

vaiko, MDMK, Vairamuthu, Controversy
January 13, 2018 212Views
வைரமுத்துவை மிரட்ட கனவு காண வேண்டாம்: வைகோ

ஆண்டாள் பிரச்சினை தொடர்பாக வைரமுத்துவை மிரட்டலாம், ஊறுவிளைவிக்கலாம் என்று எவரும் கனவு காண வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளி வைரமுத்து என்று வைகோ குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் போன்ற புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறிமுறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவை என அவர் தெரிவித்துள்ளார். ஆண்டாளையும் அவர் தந்த பாடல்களையும் மிக உன்னதமாக சித்தரித்து, மணிமுடி வேந்தர்களின் அரணாக வளர்ந்த ஆண்டாள், தமிழ் மொழியையே ஆட்சி புரிந்தாள் என்று தலைப்பிட்டு எழுதியதாக வைகோ குறிப்பிட்டுள்ளார். விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தும் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும், தினமணி நாளேட்டை அச்சுறுத்துவதும் மிகவும் கண்டனத்திற்குரியது என்று வைகோ தெரிவித்துள்ளார். வைரமுத்துவை மிரட்டலாம் என்றோ, அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவு காண வேண்டாம் என்றும் வைகோ எச்சரித்துள்ளார்.