ஹபீஸ் சயீதின் வீட்டுக்காவல் தேச நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு

share on:
Classic

ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது தேச நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என பாகிஸ்தான் ராணுவம் கூறி உள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக பாகிஸ்தானை சேர்ந்த ஹபீஸ் சயீத் செயல்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவரான ஹபீஸ் சயீத்தை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன.

சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தநிலையில் ஹபீஸ் சயீத் அதிரடியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும், ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமான 4 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஜமாத் உத் தவா இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

surya