திருச்செந்தூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்..!

share on:
Classic

திருச்செந்தூர் அருகே காரில் எடுத்துச் செல்லப்பட்ட 1,00,000ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதுகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் மது விற்பனை சூடிபிடித்துள்ளது. இதனை பயன்படுத்தி குமார், பாலாஜி ஆகிய இருவர்  அரசுமதுக்கடையில் இருந்து 800 மது பாட்டில்களை வெளியில் விற்பனை செய்ய காரில் எடுத்துச் சென்றுள்ளனர். புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1 லட்ச ரூபாய் மதிப்பிலான 800 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind