10% இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

share on:
Classic

உயர் வகுப்பினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்துள்ள மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த மசோதாவை நிறைவேற்றியதாக பலதரப்பினரும் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் கௌஷல் காந்த் மிஸ்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மசோதவை நீக்க வேண்டும் எனவும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த இடஒதுக்கீடு மசோதா அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும், பொதுப்பிரிவினருக்கு உள்ள 50% உச்சவரம்பை மீற முடியாது என்றும் அந்த மனுவில் உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind