மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்

share on:
Classic

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிகளுக்கு இடையே மாநிலங்களவையில் 10% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக மாநிலங்களவை இன்று ஒருநாள் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேரமில்லா நேரத்தின் போது, அவை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அவை கூடிய போது, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் 10% இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பு வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அவைத்தலைவர் இருக்கைய முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டன. அனைவரும் இருக்கைக்கு செல்லுமாறு அவைத் துணைத்தலைவர் கோரிக்கை விடுத்தார். இதனைத்தொடர்ந்து, கோரிக்கையை ஏற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளுக்கு திரும்பினர். தற்போது மசோதா மீது, காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

News Counter: 
100
Loading...

aravind