இன்னும் 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் இல்லாத அமெரிக்கா - ட்ரம்ப் உறுதி

share on:
Classic

இன்னும் 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் இல்லாத அமெரிக்காவை உருவாக்குவோம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மாகாண உரையில் தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிகழ்த்திய இந்த ஆண்டிற்கான மாகாண உரையில் இன்னும் 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் இல்லாத அமெரிக்காவை உருவாக்க உறுதி எடுத்துள்ளதாகவும், அனைத்து அறிவியல் தடைகளையும் தகர்த்து இந்த கனவை நனவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதற்கு ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 2017-ஆம் ஆண்டு வெளிவந்த தகவலின் படி சுமார் 38,000 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதாக தகவல் வந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் பெருமளவு குறைந்து வருகிறது. ஆனாலும் ஹெ.ஐ.வி குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எய்ட்ஸ் நோய் ஒழிப்பு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸிடம் ட்ரம்ப் உதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ramya