தமிழகத்தில் 3-வது நாளாக 100 டிகிரியை தாண்டிய வெப்பம்..!!

share on:
Classic

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. 

கோடைகாலம் தொடங்கி சில நாட்களிலேயே தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அத்துடன், அனல்காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக மதுரை, கரூர், தருமபுரி உள்ளிட்ட 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 புள்ளி 8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், கரூர் பரமத்தியில் 104 புள்ளி 3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் இந்த வெப்பநிலை, சனிக்கிழமை முதல் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வும் கணித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan