‘100’ படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு..!!

share on:
Classic

100 படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

டார்லிங் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சாம் ஆண்டன்.  இப்போது சாம் ஆண்டன் 100 என்ற திரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார். அதர்வா இந்த படத்தில் வெறப்பான  போலீஸாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கின்றார். ஆரோ சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 

சமீபத்தில் 100 படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்துள்ளது. ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த 100 படம் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan