’100’ படத்தின் அசத்தலான டிரைலர் வெளியீடு!

share on:
Classic

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 100 படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாணா காத்தாடி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு ஹீரோவா அறிமுகமானவர் தான் அதர்வா. நடிகர் முரளியின் மகனான இவர் அதன்பிறகு பரதேசி, ஈட்டி, கணிதன் என பல வெற்றி படங்களளில் நடித்துள்ளார்.  இவர் இப்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் 100 என்ற திரில்லர் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கின்றார். ஆரோ சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு  விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 

சமீபத்தில் 100 படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக படுத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் வெளியான சில மணிநேரங்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகிருக்கும் இந்த 100 படம் வரும் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan