செங்கோல் கதையுடன் 100% ஒத்துப்போகும் சர்கார் - ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்படுமா கதை திருட்டு புகார் ?

share on:
Classic

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, பழ கருப்பையா, ராதா ரவி, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. 

மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது. இந்தநிலையில் சர்கார் படத்தின் டீஸர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தின் கதை தன்னுடையது என கடந்த மாத இறுதியில் பரபரப்பை கிளப்பினார் உதவி இயக்குனரான வருண். இவர் எழுத்தாளர் சங்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு செங்கோல் என்ற தலைப்பில் தனது முதல் படத்திற்கான கதையை பதிவு செய்து வைத்திருந்தார். 

அந்த கதையை முருகதாஸ் திருடி சர்கார் என்ற பெயரில் படமாக்கியுள்ளதாக புகார் அளித்ததன் பெயரில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது, அதில் இரண்டு கதைகளும் 100% ஒத்துப்போவதாக அறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டணியில் உருவான கத்தி படத்திற்கும் இதே போன்றதொரு பிரச்சினை ஏற்பட்டது ஆனால் அது பட வெளியீட்டு பின்னரே மக்கள் மத்தியில் பரவ தொடங்கியது அதனால் கத்தி படத்தின் கதைக்கு உரியவரான அறம் பட இயக்குநர் கோபி நயினாருக்கு சாதகமாக யாரும் உடன் நிற்கவில்லை அதே சமயம் கோபி நயினாரிடம் கதை குறித்து எந்த பதிவுகளும் இல்லாததால் அவரின் பேச்சு எடுபடவில்லை. 

ஆனால் தற்போது நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவத்திற்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வருணின் புகாருக்கு செவி சாய்த்து முருகதாஸின் இந்த செயலை நிச்சயம் கண்டிக்க வேண்டும் புகழ் பெற்ற இயக்குநர் என்பதால் தான் செய்யும் தவறுகள் மறைக்கப்படும் என என்னும் இது போன்றவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பாடம் புகட்டவேண்டும் என்பது ஒவ்வொரு உதவி இயக்குநர்களின் மனக்குமுறல்களாக உ

News Counter: 
100
Loading...

sankaravadivu