தமிழக மீனவர்கள் 11 பேர் கைது..!

share on:
Classic

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, தாக்குதல் நடத்தி மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் துறைமுகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கைதான மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜப்படுத்தப்பட்டு, பின் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

News Counter: 
100
Loading...

vinoth