தமிழகத்தில் இதுவரை ரூ.132.91 கோடி பறிமுதல் - சத்யபிரத சாகு

share on:
Classic

தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 132,91,00,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 132,91,00,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் வருமான வரித்துறையினர் மட்டும் 42.37 கோடி ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே உரிய ஆவணங்களை சமர்பித்ததன் மூலம் இதுவரை 65 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 36,65,000 மதிப்புள்ள மதுபாட்டில்களும்,  37,68,000 மதிப்புள்ள போதைப்பொருட்களும் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 998 கிலோ தங்கம், 642 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக அதிமுக மீது 68 வழக்குகளும், திமுக மீது 46 வழக்குகளும், அமமுக மீது 55 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

 

News Counter: 
100
Loading...

aravind