2019 தேர்தலில் 1,500 குற்றப்பின்னணி வேட்பாளர்கள் போட்டி : தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை..

share on:
Classic

2019 பொதுத்தேர்தலில் 1,500 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. 

தேர்தல் பணிகளை பார்வையிடும் ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (National Democratic Association) நேற்று வெளியிட்ட அறிக்கையில் “ 2019 பொதுத் தேர்தலில் போட்டியிடும் 7,928 வேட்பாளர்களில் 1,500 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 8,205. அவர்களில் 1,404 பேருக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் இருந்தன. இதேபோல் 2009 பொதுத்தேர்தலில் களம் கண்ட 7,810 வேட்பாளர்களில் 1,158 பேர் மீது குற்றவியல் வழக்குகள் இருந்தன” என்று தெரிவித்துள்ளது.

தற்போது 2019 தேர்தலில் போட்டியிடும் 1,070 வேட்பாளர்கள் மீது, கொலை, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய கடும் குற்றவழக்குகள் உள்ளன. 2009-ம் ஆண்டில் கடும்குற்றவழக்கு பின்னணி உடைய வேட்பாளர்களின் எண்ணிக்கை 608. பின் 2014-ல் அந்த எண்ணிக்கை 908-ஆக அதிகரித்தது. அது தற்போதைய தேர்தலில் 1070-ஆக அதிகரித்ததன் மூலம் 2009-ம் ஆண்டை விட கூடுதலாக 462 கடும்குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

கட்சிகளின் அடிப்படையில் குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் :

பாஜக :

மொத்த வேட்பாளர்கள் : 433
குற்றப்பின்னணி உடையவர்கள் : 175
கடும் குற்றப்பின்னணி : 125

காங்கிரஸ் :

மொத்த வேட்பாளர்கள் : 419
குற்றப்பின்னணி வேட்பாளர்கள் : 164
கடும் குற்றப்பின்னணி : 107

பகுஜன் சமாஜ் : 

மொத்த வேட்பாளர்கள் : 381
குற்றப்பின்னணி வேட்பாளர்கள் : 85
கடும் குற்றப்பின்னணி : 61

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் : 

மொத்த வேட்பாளர்கள் : 69
குற்றப்பின்னணி உடையவர்கள் : 40
கடும் குற்றப்பின்னணி : 24

சுயேட்சை வேட்பாளர்கள் : 

மொத்த வேட்பாளர்கள் : 3,370
குற்றப்பின்னணி உடையவர்கள் : 400
கடும் குற்றப்பின்னணி : 292

கோடீஸ்வர வேட்பாளர்களின் எண்ணிக்கையும் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் அதிகரித்துள்ளது.

2019 பொதுத்தேர்தல் : 

மொத்த வேட்பாளர்கள் : 7,928
கோடீஸ்வர வேட்பாளர்கள் : 2,297

2014 பொதுத்தேர்தல் : 

மொத்த வேட்பாளர்கள் : 8,205
கோடீஸ்வர வேட்பாளர்கள் : 2,217

2009 பொதுத்தேர்தல் : 

மொத்த வேட்பாளர்கள் : 7,810
கோடீஸ்வர வேட்பாளர்கள் : 1,249

News Counter: 
100
Loading...

Ramya