2 ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கை சேமிப்பு கிடங்கிற்கு வந்த நாகை மாவட்ட நெல்

Classic

2 ஆண்டுகளுக்குப் பிறகு நாகையில் இருந்து, 1500 டன் நெல் சரக்கு ரயில் மூலம் பள்ளத்தூர் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு வந்தடைந்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில், 30 ஏக்கரில் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யப்படும் நெல் இப்பகுதிகளில் உள்ள ஆலைகளில் அரைக்கப்பட்டு, அரிசியாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் காவிரி டெல்டா பகுதியில் நிலவிய வறட்சியின் காரணமாக,  2 ஆண்டுகளுக்குப்பிறகு,  நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1500 டன் சன்னம் சி.ஆர்.ரக நெல் மூடைகள், சரக்கு ரயில் மூலம்  செட்டிநாடு ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு,  லாரி மூலம் பள்ளத்தூர் சேமிப்பு கிடங்கு கொண்டுவரப்பட்டது.

News Counter: 
100
Loading...

sasikanth