கொழும்புவில் குண்டுவெடிப்பு.. 160 பேர் பலி..!!

share on:
Classic

கொழும்புவில் 5 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 160 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்துவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோன்று இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயம் உட்பட 3 தேவாலயங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளன. அதே போன்று 2 நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 5 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 280க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

News Counter: 
100
Loading...

vinoth