விழுப்புரத்தில் 176 சவரன் நகைகள் பறிமுதல்..!

share on:
Classic

விழுப்புரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 176 சவரன் நகைகள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள எல்லீஸ் சத்திரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றில் இருந்து இறங்கிய 3 நபர்களை மடக்கிபிடித்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர சோதனை நடத்தினர். அதில் கோவையைச் சேர்ந்த வெங்கடேசன், மதன், பாலாஜி ஆகியோர் பொற்கொல்லர்களாக பணியாற்றி வருவதும், விழுப்புரம் கடைகளுக்கு வடிவமைக்கப்பட்ட நகைகளை ஒப்படைக்க வந்ததும் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட கம்மல், மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 176 சவரன் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் அனைத்தும் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind