கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை., மின்சாரம் தாக்கி 2 பேர் பலி..!

share on:
Classic

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தின் பேட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மின்கம்பம் ஒன்று சாய்ந்திருந்தது. இதை தொட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வலியதுறை, சங்குமுகம், பூந்துறை போன்ற கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan