வைகோவுக்கு எதிராக 2 அவதூறு வழக்குகள் : ஒரு வழக்கில் விடுவிப்பு., மற்றொரு வழக்கு தள்ளுபடி..!

share on:
Classic

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிரான 2 அவதூறு வழக்குகளில், ஒரு வழக்கில் விடுவித்த உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி முந்தைய முதலமைச்சர் கருணாநிதி எதிராக கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதேபோன்று கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கபட்டதற்கு, கருணாநிதி தான் காரணம் என வைகோ குற்றம்சாட்டினார். இது தொடர்பாகவும் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த 2 அவதூறு வழக்குகளில் இருந்து, வைகோவை விடுவிக்க எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய வழக்கில் வைகோவை விடுவிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மற்றொரு வழக்கில் வைகோவை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

News Counter: 
100
Loading...

Ragavan