சிலிக்கான் மணல் கடத்தி வந்த 2 லாரிகளை பறிமுதல்..

share on:
Classic

ஆந்திராவில் இருந்து சிலிக்கான் மணல் கடத்தி வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர்கள் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூா் எம்.ஆா் நகா் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 2 லாரிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட சிலிக்கான் மணல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூா் போலீஸார், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மணல் கடத்தி வந்த இரு லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan