ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 2 கட்சிகள் பிரச்சாரம்..!!

share on:
Classic

ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 2 முக்கிய அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய தேர்தல் அலுவலர்கள் அனுமதி கொடுத்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மக்களவைக்கான இறுதிகட்ட பிரச்சாரம் இன்று மாலை 6-மணியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுவடுவதற்காக அதிமுக வேட்பாளர் தம்பிதுரை சார்பிலும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தரப்பிலும் ஆன்லைனில் அனுமதி பெற விண்ணப்பித்து இருந்தனர். தேர்தல் அதிகாரிகள் இரு கட்சியினருக்கும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அனுமதி வழங்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று மாவட்ட உதவி தேர்தல் அலுவலகத்தில் 5-மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். பின்னர் தேர்தல் பொதுபார்வையாளர் அதிமுக தரப்பில் ஆன்லனில் செய்த விண்ணப்பத்தில் குளருபடி இருப்பதை கண்டறிந்து அனுமதியை ரத்து செய்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு மாலை 4-மணியிலிருந்து 6-மணி வரை இறுதிகட்ட பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்தார். இதனால் அதிர்ப்தி அடைந்த அதிமுகவினர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர், மேலும் இது தொடர்பாக செதியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் பெற்ற அனுமதியின் அடிப்படையில் திட்டமிட்டபடி இன்று மதியம் 2-மணிக்கு பிரசாரம் நடைப்பெறும் என தெரிவித்துள்ளார். இதனால் இரு கட்சிகளிடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan