மோடி புகைப்படத்தோடு வழங்கப்பட்ட பயணச்சீட்டு, 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்..!

share on:
Classic

மோடி புகைப்படம் இடம்பெற்ற பயணச்சீட்டு வழங்கிய 2 ரயில்வே அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் பாராபங்கி ரயில் நிலையத்தில் மோடி புகைப்படம் இடம்பெற்றிருந்த பயணச்சீட்டு வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாராபங்கி ரயில் நிலையத்தில் தவறுதலாக மோடி புகைப்படம் இடம்பெற்றிருந்த பழைய பேப்பர் ரோலில் பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பணியாளரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த பேப்பர் ரோல் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, பயணச்சீட்டு வழங்கிய 2 அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan