அதிமுக - அமமுக தொண்டர்களிடையே கடும் மோதல்.., 2 பேருக்கு கத்திக்குத்து..!

share on:
Classic

சென்னை பெரம்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் அதிமுக - அமமுகவினர் மோதிக் கொண்டதில் கத்தி குத்து விழுந்த 2 பேர் ஸ்டான்லி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் அதிமுக பெரம்பூர் வேட்பாளர் ராஜேஷ் தரப்பில் பணப்பட்டுவாட செய்வதாக அமமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற அமமுக பெரம்பூர் வேட்பாளர் வெற்றிவேல் தரப்பினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் கத்தி மற்றும் உருட்டுக்கட்டைகளால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மோதலில் கத்திக்குத்து விழுந்த 2 பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan