பாரமுல்லாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

share on:
Classic

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில், பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 

அப்போது தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind