ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...

share on:
Classic

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கஹான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உள்ளூர் போலீசார் உதவியுடன் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கியதால் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 2 மணி நேரத்திற்கு மேலாக சண்டை நீடித்தது. இந்த தாக்குதலில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News Counter: 
100
Loading...

Ragavan