வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி - முதல்வர் அறிவிப்பு

share on:
Classic

தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதிகளின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் கஜா புயல் தாக்குதல் மற்றும் பருவமழை இல்லாததால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர். தமிழகம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால் கிராமப்புறத்தில் வாழும் 35 லட்சம் பேர், நகர்புறத்தில் வாழும் 25 லட்சம் பேர் என மொத்தம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்கள் பயனடைவர் என தெரிவித்த அவர். இதற்காக 2018-19ம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்

News Counter: 
100
Loading...

aravind