பயனர்களின் தகவல்களை விற்க நினைத்த பேஸ்புக்..? அதிர்ச்சி ரிப்போர்ட்..!

share on:
Classic

 2012ஆம் ஆண்டு தனது வாடிக்கையாளர்களின் தகவல்களை விற்க 'பேஸ்புக்' நிறுவனம் யோசித்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

லாபத்தை அதிகரிக்கும் புதிய யுக்தி :
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பல நிறுவனங்களுக்கு, சமூக வலைத்தளங்களில் மக்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பெரிதும் பயன்படுகிறது. அதன் மூலம் எந்த நபருக்கு எந்த மாதிரி விளம்பரம் செய்து அவர்களை ஈர்க்க முடியும் என்பதை இந்நிறுவனங்கள் அறிந்து கொள்கின்றன. அதிக லாபத்தை தரும் இந்த யுக்திக்காக சமூக வலைத்தள தகவல்கள் திருடபடுவதும் விற்கப்படுவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பேஸ்புக் :
இதற்கு மிக பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒன்றும் விதிவிலக்கல்ல. அந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் தகவல்களை சில நிறுவனங்களுக்கு விற்கிறது என்ற பேச்சு தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால் இதை அந்நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் தான் 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் தகவல்களை விற்க யோசித்ததாகவும் பின்பு தான் வேண்டாம் என்று அந்த எண்ணத்தை விட்டதாகவும் தனியார் நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்காக ஒரு நிறுவனத்துக்கு 2,50,00 0டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

"எங்கள் பக்க நியாயம் வெளிப்படும்"
பேஸ்புக் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்து சில பெரிய நிறுவங்களுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது என்று வாதித்திட்டது. ஆனால் குற்றம் சாட்டியுள்ள நிறுவனமோ பேஸ்புக் கூறுவது போல நிசான், ராயல் பேங்க் ஆப் கானடா போன்ற நிறுவனங்களுக்கு மட்டும் இல்லாமல் பியட் , ஏர்பின்பி, நெட்பிலிக்ஸ் போன்ற மற்ற நிறுவங்களுக்கும் தகவல்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது என்று கூறுகிறது. இதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் "எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிப்படுத்த, கடுமையாக உழைப்போம்" என்று கூறியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sankaravadivu