இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கு தேவையான முழு பட்ஜெட் தாக்கல் எப்போது என அறிவித்த பிரதமர் மோடி...

share on:
Classic

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட்டில் இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கு தேவையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் தாக்கூர் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இடைக்கால பட்ஜெட் ஒரு டிரைலர் தான் என்றார். இந்த பட்ஜெட் மூலம் வரி செலுத்தும் 3 கோடி பேரும், 12 கோடி விவசாயிகளும், 40 கோடி கூலி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறிய மோடி, அதில் இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கு தேவையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என உறுதியளித்தார்.

News Counter: 
100
Loading...

aravind