2019-ல் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும்..

share on:
Classic

2019-ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

2019-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5ஆக அதிகரிக்கும் என்றும் 2020-ஆம் ஆண்டு 7.7 சதவீதமாகவும் உயரும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF- International Monetary Fund) தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதாவது 2019-ல் சீனாவின் வளர்ச்சி 6.5 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாக குறையும் என்றும் கூறியுள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளும். கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பணவீக்கம் சரிவு ஆகியவையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகபோர் சீனாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 2019-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தாலும் மற்ற ஆசிய நாடுகளின் வளர்ச்சி குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

aravind