2019 மக்களவை தேர்தல் : திருநெல்வேலி தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

தொகுதி மறுசீரமைப்புக்கு முன் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விளாத்திகுளம், சிறீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பிற்கு பின் ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குனேரி, இராதாபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி திருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள் 13,84,212
ஆண் 6,88,124
பெண் 6,96,078
மூன்றாம் பாலினத்தவர் 10

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட பிரபாகரன், திமுக வேட்பாளர் சி. தேவதாசசுந்தரத்தை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
பிரபாகரன் அ.தி.மு.க 3,98,139
சி. தேவதாசசுந்தரம் திமுக 2,72,040
சிவணைந்த பெருமாள் தேமுதிக 1,27,370
ராமசுப்பு காங்கிரஸ் 62,863

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 67.68% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 1.52% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
66.16% 67.68%  1.52%

வெற்றி நிலவரம் : இதுவரை திருநெல்வேலி தொகுதியில், காங்கிரசு 5 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 7 முறையும், சிபிஐ 1 முறையும், சுதந்திராக் கட்சி 1 முறையும் வென்றுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan