2019 மக்களவை தேர்தல் : சிதம்பரம் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), சிதம்பரம், விருத்தாச்சலம், மங்களூர் (தனி) ஆகிய சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது. தற்போது குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டான், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,

தொகுதி நிலவரம்
மாநிலம்  தமிழ்நாடு
தொகுதி சிதம்பரம்
மொத்த வாக்காளர்கள் 13,65,054
ஆண்  6,86,030
பெண்  6,79,003
மூன்றாம் பாலினத்தவர் 21

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட மா.சந்திரகாசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவனை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
மா.சந்திரகாசி அ.தி.மு.க 4,29,536
தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3,01,041
சுதா பாமக  2,79,016
வள்ளல் பெருமாள்  காங்கிரஸ்   28,988

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 77.30% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 2.31% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம்  2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
77.30% 79.61% 2.31%

வெற்றி நிலவரம் : இதுவரை சிதம்பரம் தொகுதியில், காங்கிரசு 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan