2019 மக்களவை தேர்தல் : கோயம்புத்தூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. முன்பிருந்த பேரூர், திருப்பூர் ஆகியவை நீக்கப்பட்டன. சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி கோயம்புத்தூர்
மொத்த வாக்காளர்கள் 16,53,257
ஆண் 8,35,450
பெண் 8,17,782
மூன்றாம் பாலினத்தவர் 25

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட நாகராஜன், திமுக வேட்பாளர் கணேஷ்குமாரை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தொகுதி
வேட்பாளர் பெயர்  கட்சி  பெற்ற வாக்குகள்
நாகராஜன் அ.தி.மு.க 4,31,717
கணேஷ்குமார் திமுக 2,17,083
சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக 3,89,701
ஆர்.பிரபு காங்கிரஸ்  56,962

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 68.17% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 2.67% குறைவாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
70.84% 68.17%  2.67%

வெற்றி நிலவரம் : இதுவரை கோயம்புத்தூர் தொகுதியில், காங்கிரஸ் 5 முறையும், திமுக 2 முறையும், சிபிஐ 4 முறையும், சிபிஎம் 2 முறையும், வென்றுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan