2019 மக்களவை தேர்தல் : திண்டுக்கல் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன் திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கேட்டை, சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர் உள்ளிட்ட தொகுதிகள் இருந்தது. தற்போது பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

திண்டுக்கலின் தொகுதி நிலவரம் மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை:

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி திண்டுக்கல்
மொத்த வாக்காளர்கள் 16,37,511
ஆண் 8,13,707
பெண் 8,23,696
மூன்றாம் பாலினத்தவர் 108

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட உதயகுமார், திமுக வேட்பாளர் எஸ்.காந்திராஜனை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
உதயகுமார் அ.தி.மு.க 5,10,462
எஸ்.காந்திராஜன் திமுக 3,82,617
கிருஷ்ணமூர்த்தி தேமுதிக 93,794
சித்தன் காங்கிரஸ் 35,632

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 77.36% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 1.78% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம்  வித்தியாசம்
75.58%  77.36% 1.78%

வெற்றி நிலவரம் : இதுவரை திண்டுக்கல் தொகுதியில், அ.தி.மு.க. 8 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 3 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் 1 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan