2019 மக்களவை தேர்தல் : ஈரோடு தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

ஈரோடு மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஈரோடு. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை நீக்கியதும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தற்போது குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம்  தமிழ்நாடு
தொகுதி ஈரோடு
மொத்த வாக்காளர்கள் 12,96,414
ஆண்   6,44,434
பெண்  6,51,924
மூன்றாம் பாலினத்தவர் 56

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, மதிமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ். செல்வக்குமார் சின்னையன், மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ். செல்வக்குமார் சின்னையன் அ.தி.மு.க 4,66,995
அ.கணேசமூர்த்தி மதிமுக 2,55,432
எச். பவித்திரவள்ளி திமுக 2,17,260
பி. கோபி காங்கிரஸ் 26,726

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 76.06% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 0.08% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
75.98%  76.06%  0.08%

வெற்றி நிலவரம் : இதுவரை ஈரோடு தொகுதியில், மதிமுக 1 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan