2019 மக்களவை தேர்தல் : கன்னியாகுமரி தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதிலிருந்து திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி கன்னியாகுமரி
மொத்த வாக்காளர்கள் 14,30,918
ஆண்  7,24,438
பெண் 7,06,416
மூன்றாம் பாலினத்தவர் 64

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் பாஜக,  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹ.வசந்தகுமாரை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி  பெற்ற வாக்குகள்
பொன். இராதாகிருஷ்ணன் பாஜக 3,72,906
ஹ.வசந்தகுமார் இந்திய தேசிய காங்கிரஸ்  2,44,244
டி.ஜாண் தங்கம் அஇஅதிமுக 1,76,239
எப்.எம்.ராஜரத்தினம் திமுக 1,17,933

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 67.69% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 2.70% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம்  2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
64.99%  67.69%  2.70%

வெற்றி நிலவரம் : கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan