2019 மக்களவை தேர்தல் : கரூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

கரூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன் அரவாக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகிய தொகுதிகள் இருந்தன. பிறகு தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கரூர் மக்களவைத் தொகுதியில் இருந்த மருங்காபுரி, குளித்தலை, தொட்டியம் ஆகியவை நீக்கப்பட்டன. புதிதாக மணப்பாறை, விராலிமலை ஆகிய இரு தொகுதிகள் இணைக்கப்பட்டன. இவை இரண்டும் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி கரூர்
மொத்த வாக்காளர்கள் 12,97,341
ஆண் 6,40,970
பெண்  6,56,340
மூன்றாம் பாலினத்தவர் 31

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.தம்பிதுரை, திமுக வேட்பாளர் சின்னதம்பியை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
எம்.தம்பிதுரை அ.தி.மு.க  5,40,722
சின்னசாமி  திமுக 3,45,475
என்.எஸ். கிருஷ்ணன் தேதிமுக 76,560
ஜோதிமணி காங்கிரஸ் 30,459

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 80.47% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 0.99% குறைவாகும்.

வாக்குபதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
81.46%  80.47% 0.99%

வெற்றி நிலவரம் : இதுவரை கரூர் தொகுதியில், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 6 முறையும், திமுக 1 முறையும், தமாகா 1 முறையும், சுதந்திரா கட்சி 1 முறையும் வென்றுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan