2019 மக்களவை தேர்தல் : மதுரை தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

மதுரை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. மக்களவைத் தொகுதிகள் வரிசையில் 32-வதாக இடத்தை பெற்றுள்ளது.

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. 
தற்போது மதுரையானது மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,

தொகுதி நிலவரம்
மாநிலம்தமிழ்நாடு
தொகுதிமதுரை
மொத்த வாக்காளர்கள்14,39,792
ஆண்7,16,020
பெண் 7,23,719
மூன்றாம் பாலினத்தவர்53

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ணன், திமுக வேட்பாளர் வ.வேலுச்சாமியை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர்கட்சி பெற்ற வாக்குகள்
கோபாலகிருஷ்ணன்அ.தி.மு.க4,54,167
வ.வேலுச்சாமிதி.மு.க2,56,731
சிவமுத்துகுமார்தே.மு.தி.க 1,47,300
பாரத் நாச்சியப்பன்காங்32,143

முக்கிய குறிப்பு : பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை இந்தத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் இவர்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம்2014 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
77.48% 67.88%9.60%

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 67.88% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 9.60% குறைவாகும்.

வெற்றி நிலவரம் : இதுவரை மதுரை தொகுதியில்,
காங்கிரஸ் 8 முறையும், அ.தி.மு.க. 1 முறையும்,  திமுக 1 முறையும், சிபிஎம் 3 முறையும், சிபிஐ ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan