2019 மக்களவை தேர்தல் : மயிலாடுதுறை தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. இந்த தொகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ள தொகுதியாகும்.

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. மறுசீரமைப்புக்கு பின் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளன. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளன.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,

தொகுதி நிலவரம்
மாநிலம்   தமிழ்நாடு
தொகுதி மயிலாடுதுறை
மொத்த வாக்காளர்கள் 13,49,796
ஆண் 6,79,584
பெண் 6,70,211
மூன்றாம் பாலினத்தவர் 1

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, பாமக, காங் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, மனிதநேய மக்கள் கட்சியை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.கே. பாரதி மோகன், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலியை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆர்.கே. பாரதி மோகன் அ.தி.மு.க 5,13,729
ஹைதர்அலி மனிதநேய மக்கள் கட்சி 2,36,679
அகோரம் பாமக 1,44,085
மணிசங்கர் காங்கிரஸ்  58,465

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 75.87% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 2.62% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
73.25% 75.87% 2.62%

வெற்றி நிலவரம் : இதுவரை மயிலாடுதுறை தொகுதியில், காங்கிரஸ் 9 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், திமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan