2019 மக்களவை தேர்தல் : நீலகிரி தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

நீலகிரி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு இருந்த சட்டசபை தொகுதிகள் மேட்டுப்பாளையம், அவனாசி (தனி), தொண்டாமுத்தூர், குன்னூர் (தனி), உதகமண்டலம், கூடலூர். தொகுதி மறு சீரமைப்புக்கு பின் பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,

தொகுதி நிலவரம்
மாநிலம்தமிழ்நாடு
தொகுதிநீலகிரி
மொத்த வாக்காளர்கள்12,41,437
ஆண்6,15,957
பெண்6,25,453
மூன்றாம் பாலினத்தவர்27

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.கோபாலகிருஷ்ணன், திமுக வேட்பாளர் ஆ.இராசாவை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர்கட்சிபெற்ற வாக்குகள்
சி.கோபாலகிருஷ்ணன்அ.தி.மு.க4,63,700
ஆ.இராசாதி.மு.க3,58,760
பி.காந்திகாங்கிரஸ் 37,702

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 73.43% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 2.64% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2014 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
70.79%73.43%2.64%

வெற்றி நிலவரம் : இதுவரை நீலகிரி தொகுதியில்,
காங்கிரஸ் 8 முறையும், அ.தி.மு.க. 2 முறையும்,  திமுக 2 முறையும், பாஜக 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan