2019 மக்களவை தேர்தல் : பெரம்பலூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு பெரம்பலூர் (தனி), உப்பிலியாபுரம் (தனி), வரகூர்(தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது. பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன.

கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி பெரம்பலூர்
மொத்த வாக்காளர்கள் 12,84,269
ஆண் 6,33,416
பெண் 6,50,827
மூன்றாம் பாலினத்தவர் 26

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் அதிமுக, திமுக, ஐஜேகே, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.பி. மருதராஜா, திமுக வேட்பாளர் சீமானூர் பிரபுவை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி  பெற்ற வாக்குகள்
ஆர்.பி. மருதராஜா அ.தி.மு.க 4,62,693
சீமானூர் பிரபு திமுக 2,49,645
பாரிவேந்தர் ஐஜேகே 2,38,887
ராஜசேகரன் காங்கிரஸ் 31,998

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 80.02% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 0.67% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
79.35% 80.02% 0.67%

வெற்றி நிலவரம் : இதுவரை பெரம்பலூர் தொகுதியில், திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், வெற்றிபெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan