2019 மக்களவை தேர்தல் : சிவகங்கை தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

சிவகங்கை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. மக்களவைத் தொகுதிகள் வரிசையில் 31வது இடத்தில் உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக சிவகங்கை தொகுதி மாற்றப்பட்டது. முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. சிவகங்கை தொகுதியானது காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட சட்ட மன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம்  தமிழ்நாடு
தொகுதி சிவகங்கை
மொத்த வாக்காளர்கள் 14,10,287
ஆண் 7,02,936
பெண் 7,07,351
மூன்றாம் பாலினத்தவர் 0

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன், திமுக வேட்பாளர் சுப. துரைராஜை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
செந்தில்நாதன் அ.தி.மு.க  4,75,993
சுப. துரைராஜ்  திமுக 2,46,608
எச். ராஜா பாஜக   1,33,763
கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் 1,04,678

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 72.83% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 1.85% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
70.98% 72.83% 1.85%

வெற்றி நிலவரம் : இதுவரை சிவகங்கை தொகுதியில், காங்கிரசு 7 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan