2019 மக்களவை தேர்தல் : தேனி தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

தேனி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. பெரியகுளம் மக்களவைத் தொகுதி என்பது தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடிநாயக்கனூர் உள்ளைட்ட தேனி மாவட்டத்துத் சட்ட மன்ற தொகுதிகளையும், மதுரை மாவட்டத் தொகுதியான சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம்தமிழ்நாடு
தொகுதிதேனி
மொத்த வாக்காளர்கள்14,33,049
ஆண்7,14,395
பெண்7,18,553
மூன்றாம் பாலினத்தவர்101

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட ரா.பார்த்திபன், திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கனை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர்கட்சி பெற்ற வாக்குகள்
ரா.பார்த்திபன்அ.தி.மு.க5,71,254
பொன். முத்துராமலிங்கன்திமுக2,56,722
அழகுசுந்தரம்மதிமுக1,34,362
ஆருண்காங்கிரஸ்  71,432

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 75.02% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 0.54% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவிதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம்2014 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
74.48%  75.02%  0.54%

வெற்றி நிலவரம் : இதுவரை தேனி தொகுதியில், காங்கிரஸ் 5 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 7 முறையும், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 1 முறையும்,சுதந்திராக் கட்சி 1 முறையும் வென்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan