2019 மக்களவை தேர்தல் : திருவள்ளூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), பூந்தமல்லி(இப்போது தனி தொகுதி), திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி திருவள்ளூர்
மொத்த வாக்காளர்கள் 17,02,114
ஆண் 8,52,275
பெண் 8,49,577
மூன்றாம் பாலினத்தவர் 262

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர். பொ. வேணுகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
டாக்டர். பொ. வேணுகோபால் அ.தி.மு.க 6,28,499
இரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3,05,069
யுவராஜ் தேமுதிக 2,04,734
எம். ஜெயக்குமார் காங்கிரஸ் 43,960

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 73.73% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 3.16% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம்  2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
70.57% 73.73% 3.16%

வெற்றி நிலவரம் : இதுவரை அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan