2019 மக்களவை தேர்தல் : திருப்பூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

திருப்பூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. 

2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு காரணமாக திருப்பூர் புதியதாக உருவாக்கப்பட்டது. தொகுதி சீரமைப்புக்கு பின் ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டசபைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடக்கு, தெற்கு என இரண்டாகியுள்ளது. இந்த திருப்பூர் தொகுதியானது பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி திருப்பூர்
மொத்த வாக்காளர்கள் 13,75,318
ஆண் 6,97,549
பெண்  6,77,711
மூன்றாம் பாலினத்தவர்  58

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா, திமுக வேட்பாளர் செந்தில்நாதனை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
சத்தியபாமா  அ.தி.மு.க 4,42,778
செந்தில்நாதன் திமுக 2,05,411
என். திணேஷ்குமார் தேமுதிக 2,63,463
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் காங்கிரஸ் 47,554

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 76.22% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 1.55% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
74.67%  76.22%  1.55%

வெற்றி நிலவரம் : இதுவரை அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan