2019 மக்களவை தேர்தல் : வேலூர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

வேலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு(தனி), ஆணைக்கட்டு, வேலூர், ஆரணி ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்புக்கு பின் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி வேலூர்
மொத்த வாக்காளர்கள் 12,80,415
ஆண் 6,35,092
பெண்  6,45,309
மூன்றாம் பாலினத்தவர் 14

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக, புதிய நீதிக்கட்சி, முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, புதிய நீதிக்கட்சியை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட பா.செங்குட்டுவன், புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தொகுதி
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
பா.செங்குட்டுவன் அ.தி.மு.க 3,83,719
ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சி 3,24,326
அப்துல் ரஹ்மான் முஸ்லிம் லீக் 2,05,896
விஜய இளஞ்செழியன் காங்கிரஸ் 43,960

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 74.58% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 2.89% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
71.69%  74.58%  2.89%

வெற்றி நிலவரம் : இதுவரை வேலூர் தொகுதியில், திமுக 5 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், பாமக 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan