2019 மக்களவை தேர்தல் : விருதுநகர் தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

விருதுநகர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் மதுரை மாவட்டத்தில் உள்ளன.

2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு காரணமாக சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் விருதுநகர் தொகுதி உருவாக்கப்பட்டது. சிவகாசி மக்களவைத் தொகுதியில் சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் (தனி), கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி, 

தொகுதி நிலவரம்
மாநிலம்தமிழ்நாடு
தொகுதிவிருதுநகர்
மொத்த வாக்காளர்கள்13,46,238
ஆண்6,66,436
பெண்6,79,714
மூன்றாம் பாலினத்தவர்88

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக, மதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, மதிமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட்ட இராதாகிருஷ்ணன், மதிமுக வேட்பாளர் வைகோவை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர்கட்சிபெற்ற வாக்குகள்
இராதாகிருஷ்ணன்அ.தி.மு.க4,06,694
வைகோமதிமுக 2,61,143
இரத்தினவேலுதிமுக2,41,505
மாணிக் தாகூர்காங்கிரஸ்38,482

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 74.96% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 2.42% குறைவாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம்2014 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
77.38%74.96% 2.42%

வெற்றி நிலவரம் : கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan