2019 மக்களவை தேர்தல் : ஆரணி தொகுதி பற்றிய ஒரு சிறப்பு பார்வை..!!

share on:
Classic

ஆரணி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

2008-ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவை தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதில் போலூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் சேர்த்து ஆரணி தொகுதியாக உருவாக்கப்பட்டது.

ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி,

தொகுதி நிலவரம்
மாநிலம் தமிழ்நாடு
தொகுதி ஆரணி
மொத்த வாக்காளர்கள் 13,48,154
ஆண் 6,73,137
பெண்  6,74,984
மூன்றாம் பாலினத்தவர்  33

கடந்த 2014 ஆம் ஆண்டு 16-வது மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதில் அதிமுக, திமுகவை விட அதிக வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட செஞ்சி சேவல் வெ.ஏழுமலை,திமுக வேட்பாளர் ஆர்.சிவானந்தத்தை தோற்கடித்து வெற்றிபெற்றார்.

2014 மக்களவை தேர்தல் முடிவு
வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள்
செஞ்சி சேவல் வெ.ஏழுமலை அ.தி.மு.க 5,02,721
ஆர்.சிவானந்தம் திமுக 2,58,877
ஏ.கே. மூர்த்தி பாமக 2,53,332
விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் 27,717

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 80.00% ஆக இருந்தது. இது முந்தைய 15-வது மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது 3.38% அதிகமாகும்.

வாக்குப்பதிவு சதவீதம்
2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
76.62%  80.00%  3.38%

வெற்றி நிலவரம் : இதுவரை ஆரணி தொகுதியில், காங்கிரஸ் 1 முறையும், அ.தி.மு.க. 1 முறையும், வெற்றிபெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan